முத்தின கத்திரிக்கா விலை போகுமா...?
நடித்தப் படங்கள் தொடர்ச்சியாக தோல்வியடைய, இனி நடிப்பதில்லை, இயக்கம் மட்டுமே என்று சுக்கானின் திசையை இயக்கம் பக்கம் திருப்பினார் சுந்தர் சி.
ஆனாலும், அவ்வப்போது முகம் மேக்கப் கேட்டு அடம்பிடிக்கிறது போலும். அரண்மனை படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்தவர் அதனை அரண்மனை 2 படத்திலும் தொடர்ந்தார். தற்போது தனி நாயகனாக ஒரு படத்தில் நடித்துள்ளார். அதுதான் முத்தின கத்திரிக்கா.
மலையாளத்தில் பிஜு மேனன் நடிப்பில் வெற்றி பெற்ற வெள்ளி மூங்கா படத்தின் தமிழ் ரைட்ஸை வாங்கி இந்தப் படத்தை தனது அவ்னி சினிமாஸ் சார்பில் தயாரித்துள்ளார். படத்தை இயக்கியிருப்பது சுந்தர் சி.யின் உதவி இயக்குனர் வெங்கட் ராகவன்.
பூனம் பஜ்வா நாயகியாக நடித்துள்ள இந்தப் படம் இம்மாதம் திரைக்கு வருகிறது. ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் இப்படத்தை தமிழகமெங்கும் வெளியிடுகிறது.
Labels:
cinema seithigal
No comments :
Post a Comment