ஆஸ்கார் விருது கொடுத்தா தான் இளையராஜா வாங்குவாரா? - கொதித்தெழுந்த கங்கை அமரன்
இந்திய சினிமாவின் மிக உயரிய விருது என்றால் அது தான் தேசிய விருது. இந்த 63வது தேசிய விருது சமீபத்தில் வழங்கப்பட்டது. தாரை தப்பட்டை படத்திற்கு பின்னணி இசைக்காக இளையராஜாவுக்கு வழங்கப்பட்ட விருதை ஏற்காமல் இந்த விழாவை புறக்கணித்தார். பாடல், பின்னணி இசை என இரண்டு விருதுகள் கொடுக்கப்படுவது அவருக்கு பிடிக்கவில்லையாம்.
இதுபற்றி தேசியவிருது குழுவில் இந்த விருதுக்கு பரிந்துரை செய்த இவரது தம்பி இயக்குனர் கங்கை அமரனிடம் கேட்டபோது, இது முற்றிலும் தவறாகும், பிடிக்கவில்லை என்றால் முதலிலேயே கூறியிருந்தால் வேறு ஒரு இசையமைப்பாளருக்காவது இந்த விருது கிடைத்திருக்கும். இப்படி திமிறாக நடந்து கொள்வது பற்றி பல ரசிகர்கள் என்னிடம் மனசு வருந்தி கேட்கும் போது கோபம் வருகிறது.
இப்படி விருதை ஏற்காமல் அவமானப்படுத்துவது கலைஞனுக்கு அழகல்ல. தாரை தப்பட்டை படத்தில் இடம் பெற்ற வதன வதன பாடல் - ஜிங்கிடி ஜிங்கிடி உனக்கு என்ற பழைய பாடலின் காப்பி. பிறகு எப்படி பாடலுக்கு விருது கொடுக்க முடியும். ஆஸ்கார் விருது கொடுத்தால் தான் வாங்குவாரா என்று கொந்தளித்து பேசியுள்ளார்.
Labels:
cinema news
No comments :
Post a Comment