கிரண்பேடி பதவியேற்பு விழா : ரஜினி - விஜய்க்கு அழைப்பு
புதுச்சேரியின் புதிய துணை நிலை ஆளுநராக கிரண்பேடி பதவியேற்க உள்ள விழாவில் கலந்து கொள்வதற்காக நடிகர்கள் ரஜினி மற்றும் விஜய்க்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியும் சமூக ஆர்வலருமான கிரண்பேடி, டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவாலோடு சேர்ந்து சமூக பணியில் ஈடுபட்டவர். 2015ஆம் ஆண்டு அரவிந்த் கெஜ்ரிவால் இரண்டாம் முறை தேர்தலில் நின்றபோது அவரை எதிர்த்து கிரண்பேடி பாஜக சார்பில் களம் இறங்கினார். ஆனால் கிரண்பேடி தோல்வி அடைந்தார்.
இந்நிலையில், அவர் புதுச்சேரியின் துணை ஆளுநராக சமீபத்தில் நியமிக்கப்பட்டார். அவர் பதவியேற்கும் விழா நாளை மாலை 6.30 மணிக்கு புதுச்சேரியில் கவர்னர் மாளிகையில் நடக்கவுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.கே.கவுல் அவருக்கு பதவிப்பிரமானம் செய்து வைக்கிறார்.
அந்த விழாவில் கலந்து கொள்ள வருமாரு நடிகர்கள் ரஜினிகாந்த மற்றும் விஜய் ஆகியோருக்கு அழைப்பிதழ் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், அவர்கள் அந்த விழாவில் கலந்து கொள்கிறார்களா என்பது பற்றி தெரியவில்லை.
Labels:
cinema news
,
other
No comments :
Post a Comment