தெறிக்க தெறிக்க ஷாலினியை காதலித்த அஜித்தை பற்றி உங்களுக்கு தெரியுமா!!!

Share this :
No comments

அஜித், ஷாலினி இந்திய திரையுலகின் நட்சத்திர காதல் தம்பதிகளில் ஒரு ஜோடி. அனைவரும் வியக்கும் படி இல்லறத்தின் தொடக்கம் முதல் இன்று வரை நல்லறமாக நடத்தி வருபவர்கள். இவர்களின் பிரியத்தை பிரிக்க "எவனாலும் முடியாது, எமனாலும் முடியாது" என்பது போல வாழ்ந்து வருபவர்கள்.

கார்மென்ட்ஸில் வேலை செய்த தல அஜீத்தை பற்றி உங்களுக்கு தெரியுமா!!! கடந்த 2008ஆம் ஆண்டு இந்த காதல் ஜோடியின் இலட்சினையாய் அழகிய தேவதை பிறந்தாள், அனோஷ்கா.

மற்றும் இந்த வருடம் சமூக வலைத்தளம் மொத்தக் கொண்டாட்டத்தின் மத்தியில் பிறந்தார் குட்டி "தல" அத்விக். இந்த நட்சத்திர காதல் தம்பதியிடம் இருந்து அனைவரும் கற்றுக் கொள்ள வேண்டிய சில விஷயங்கள் இருக்கின்றன அவற்றைப் பற்றி இனிக் காண்போம்....

சுதந்திரம் திருமணத்திற்கு முன்பே ஒருமுறை பேட்டி அளித்த போது, தான் எனது சொந்த கருத்துக்களை ஷாலினி மீது திணிக்க மாட்டேன். அவருக்கு பிடித்ததை அவர் தொடர்ந்து செய்வார்.

அது நடிப்பாக இருந்தாலும் சரி, விளையாட்டாக இருந்தாலும் சரி அது அவரது விருப்பம் என்று கூறியிருந்தார் அஜித். உங்கள் துணை அவருக்கு பிடித்தத் துறையில் (அ) வேலையில் ஈடுபட சுதந்திரம் அளிக்க வேண்டும்.

குடும்ப பொறுப்பு மேல் கூறியவாறு அஜித் கூறியிருந்தாலும் கூட, தனக்கு குடும்ப பொறுப்பு மிகவும் முக்கியமானது என்று கூறியது மட்டுமின்றி, குடும்ப பொறுப்பை முழுவதுமாய் ஷாலினி ஏற்று நடத்தினார்.

ஒரு பக்கம் குடும்பத்தை வழிநடத்திச் சென்றுக் கொண்டே, மறுப்புறம் தனக்கு பிடித்த விளையாட்டான பேட்மிட்டனிலும் சிறப்பாக செயல்பட்டு வந்தார் ஷாலினி. குடும்ப பொறுப்பு என்பது பெண்களின் வேலை அல்ல கடமை என்பதை உணர வேண்டும்.

காது கொடுத்து கேட்பது நண்பர்களாக இருந்த காலக்கட்டத்தில் இருந்து இன்று வரை அஜித், ஷாலினி இருவரும் ஒருவர், மற்றொருவரிடம் கூறுவதை காதுக் கொடுத்து கேட்கிறார்கள்.

இந்த பண்பினால் தான் இருவர் மத்தியில் சண்டை என்பது ஏற்படாமல் இன்று வரை காதல் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. எப்போது கணவன் மனைவி இருவரும் இந்த பண்பினை வளர்த்துக் கொள்கிறார்களோ அப்போது இல்லறம் நல்லறமாக மலர்கிறது.

ஜாதி மதம் தடையல்ல ஷாலினி கிறிஸ்துவர், அஜித் பிராமின், இது அவர்களது காதலுக்கும், வாழ்வியலுக்கும் ஓர் தடையாக இருந்திடவில்லை. காரணம் யாரும், மற்றொருவருக்காக மதம் மாறவில்லை. மதம் என்பது உள்ளத்தில் நல்ல எண்ணங்கள் வளர்வதற்காக தானே தவிர, காதலுக்கு தடையாய் அமைவதற்கு அல்ல. எனவே, காதலித்த பெண்ணை மதம் மாற கூறி வற்புறுத்த வேண்டாம்.

உடல்நிலை சரியில்லாத போது அக்கறை பைக் மற்றும் கார் பந்தயங்களுக்கு சென்று, நிறைய விபத்துக்களை சந்தித்துள்ளார் அஜித். இதுபற்றி ஷாலினிக்கு காதலிக்கும் போதே தெரியும். தெரிந்தும் காதலித்து, திருமணம் செய்துக் கொண்டு இன்று வரை அஜித்தின் மீது இம்மியளவு குறையாத அக்கறை செலுத்தி வருகிறார் ஷாலினி. தம்பதிகளின் உறவு பாலத்தை பாதுகாப்பதே இந்த அக்கறை தான்.

தோல்விகளின் போதும் தோள் கொடுப்பது வெற்றியும், தோல்வியும் வாழ்க்கையில் தவிர்க்க முடியாதவை. உறங்காமல் மறுநாள் எவராலும் எழுந்திருக்க முடியாது. தொடர் தோல்வியில் தவித்த அஜித்துக்கு பலமாக இருந்து வந்தார் ஷாலினி. அவரது காதலும், பாசமும் தான், நிஜ வாழ்க்கையிலும், திரைப்படங்களில் எதிரொலிக்கும் அஜித்தின் தைரியம். கணவன், மனைவி இருவரும் ஒருவருக்கு ஒருவர் பக்க பலமாக இருக்க வேண்டும்.

கர்ப்பக் காலத்தில் உறுதுணையாக இருப்பது திருமணமாகி ஏழு வருடங்கள் கழித்து கருத்தரித்து இருந்தார் ஷாலினி. அப்போது "பில்லா" படத்தின் வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார் அஜித்.

தன் காதல் மனைவி கருவுற்றிருக்கும் தருணத்தில் அருகே இருந்து கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்று, விமானத்தில் அங்கும் இங்கும் பறந்து, பறந்து படத்தையும் முடித்து, ஷாலினிக்கும் உறுதுணையாக இருந்தார் அஜித்.

சிறந்த தாய், தந்தையாக திகழ்வது அஜித் திரைப்படம், ஏரோ மாடலிங் போன்றவற்றிலும், ஷாலினி விளையாட்டு துறையிலும் பெரும் நட்சத்திரங்களாக இருப்பினும் கூட, குழந்தை வளர்ப்பில் சிறந்த தாய், தந்தையாக திகழ்ந்தனர்.

உங்கள் காதலின் பரிசாய் பிறக்கும் குழந்தைகள் மீது நீங்கள் காட்டும் அன்பு மிகவும் முக்கியம். அந்த அன்பு தான் பின்னாளில் உங்கள் குழந்தையின் எதிர்காலத்தை தீர்மானம் செய்கிறது.










No comments :

Post a Comment