நொடிப்பொழுதில் நிகழ்ந்த விபரீதம்... குழந்தைகளுடன் ரயில் முன்பு பாய்ந்த பெண்!...
உக்ரைன் நாட்டில் தாய் ஒருவர் தன்னுடைய இரு பிள்ளைகளுடன்ஓடும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொள்ள முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உக்ரைன் நாட்டின் Kharkiv மெட்ரோ ரயில் நிலையத்திற்கு தாய் ஒருவர் தன்னுடைய இரு பிள்ளைகளுடன் வந்துள்ளார்.
அந்த பிள்ளைகளுக்கு 5, 12 வயதுஇருக்கும், ப்ளாட்பாரத்தில் தன்னுடைய இரு பிள்ளைகளின் கரங்களையும் பிடித்துக் கொண்டு வந்த தாய், தற்கொலை செய்து கொள்வதற்காக ஓடும் ரயில் முன் குதித்துள்ளார்.
எனினும் அதிர்ஷ்டவசமாக அவர்களது உயிருக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை. அங்குள்ள சிசிடிவி கமெராவில் பதிவான இந்த காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. இதுகுறித்து தகவலறிந்த பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Labels:
News
,
others
No comments :
Post a Comment