நேர்மை உறங்கலாமா? நீங்கள் விலகலாமா? - தமிழருவி மணியனுக்கு விவேக் ரியாக்ஷன்
காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளதற்கு, நடிகர் விவேக் வருத்தம் தெரிவித்துள்ளார்.
நான் இறப்பு என்னைத் தழுவும் இறுதி நாள் வரை அரசியல் உலகத்தில் மீண்டும் அடியெடுத்து வைப்பதில்லை என்ற முடிவுடன் போகிறேன் என்று சிறந்த பேச்சாளரும், காந்திய மக்கள் கட்சியின் தலைவருமான தமிழருவி மணியன் நேற்று [26-05-16] வியாழனன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
இதற்கு நடிகர் விவேக் தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார். இது குறித்து, தனது ட்விட்டர் பக்கத்தில், “தமிழருவி மணியன் பொது வாழ்வு மற்றும் அரசியல் வாழ்வில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளாராம். நேர்மை உறங்கலாமா? நீங்கள் விலகலாமா?” என்று பதிவிட்டுள்ளார்.
மேலும், ஒரு பதிவில், “ஒரு முறை தமிழருவி மணியன் என் அலுவலகம் வந்தார். அவருக்கு ஒரு பேனா பரிசளித்தேன். வாங்க மறுத்து, சொன்னார், ’இலவசம் அனைத்தும் லஞ்சமே. எவ்வளவு பெருந்தன்மை!
Labels:
cinema seithigal
No comments :
Post a Comment