சிம்பு ஒரு அசுரன்: இது நம்ம ஆளு திரைப்படம் எனக்கு புதுவித அனுபவம்

Share this :
No comments


இது நம்ம ஆளு திரைப்படம் நீண்ட நெடும் போராட்டத்துக்கு பின்னர் இன்று வெளியானது. முன்னாள் காதலர்களான சிம்புவும், நயன்தாராவும் சேர்ந்து நடித்திருக்கும் இந்த திரைப்படம் பரவலாக நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.


இந்த திரைப்படம் தனக்கு புதுவித அனுபவத்தை கொடுத்திருக்கிறது எனவும், சிம்பு ஒரு அசுரன் எனவும் இந்த படத்தில் சிம்புவின் முன்னாள் காதலியாக வரும் ஆண்ட்ரியா கூறியுள்ளார்.

இந்த திரைப்படம் குறித்து பேசிய நடிகை ஆண்ட்ரியா, சிம்புவுடன் இணைந்து நடித்தது தனக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்திருக்கிறது, இது தனக்கு ஒரு புதுவித அனுபவத்தை கொடுத்திருக்கிறது என்றார் நடிகை ஆண்ட்ரியா.

மேலும் படப்பிடிப்பு என்று வந்துவிட்டால் அடுத்த நொடியே சிம்பு ஒரு நடிப்பு அசுரன் ஆகி விடுவார், சிம்புவின் திறமை அபரிதமானது. ஒவ்வொரு காட்சியிலும் சிம்புவின் நடிப்பு திறனை கண்டு நான் வியந்து போகிறேன்.

எதார்த்தமான வேடத்தில் நடிக்க வேண்டும் என்ற எனது நீண்ட நாள் கனவை நிஜமாக்கி இருக்கிறது இந்த திரைப்படம். சிறிய வேடமாக இருந்தாலும் வலிமையான கதையம்சத்தில் நடிப்பதை தான் நான் பெரிதும் விரும்புகிறேன். அந்த வகையில் இது நம்ம ஆளு திரைப்படம் எனக்கு பக்கபலமாக அமையும் என்று நம்புகிறேன் என்றார் ஆண்ட்ரியா.

No comments :

Post a Comment