ஜெயலலிதாவுக்கு விளம்பரம் கொடுத்த நடிகை நமீதா!

Share this :
No comments


அதிமுகவில் சேர்ந்த நடிகை நமீதா ஆறாவது முறையாக முதல்வராக பதவியேற்ற ஜெயலலிதாவுக்கு வாழ்த்து தெரிவித்து நாளிதழில் விளம்பரம் கொடுத்துள்ளார்.

நமது எம்.ஜி.ஆர். நாளிதழில், ஆறாம் முறையாக அரியணை ஏறப் போகும் எங்கள் பெண்ணினத்தின் பேரரசிக்கு... பணிவார்ந்த வாழ்த்துகள்! தமிழகத்தின் நிரந்தர முதல்வரே நீடூழி வாழ்க! - நமீதா என அவர் விளம்பரம் கொடுத்துள்ளார்.

சமீபத்தில் திருப்பதி சென்ற நமீத அதிமுக மீண்டும் ஆட்சியை பிடித்து ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வர வேண்டும் என வேண்டி இருந்தார். இந்நிலையில் அவரது வேண்டுதல் நிறைவேறியதால் மீண்டும் திருப்பதி சென்று நமீதா சாமி தரிசனம் செய்ததாக கூறினார்.

இந்நிலையில் நமது எம்.ஜி.ஆர். நாளிதழில் நமீதா விளம்பரம் கொடுத்து தான் தீவிர அரசியலில் ஈடுபட இருப்பதை சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments :

Post a Comment