மேட்ரிட் சர்வதேச திரைப்பட விழாவில் தமிழ் சினிமா

Share this :
No comments


ஜுலை மாதம் புகழ்பெற்ற மேட்ரிட் சர்வதேச திரைப்பட விழா நடைபெற உள்ளது. இந்தத் திரைப்பட விழாவில் திரையிட, கர்மா என்ற தமிழ்ப் படம் தேர்வாகியுள்ளது.

அத்துடன் சிறந்த வெளிநாட்டுப்பட இயக்குனர் பிரிவில் போட்டியிடவும் இப்படம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

கர்மா படத்தை விளம்பரப்பட இயக்குனர் அரவிந்த் ராமலிங்கம் இயக்கியுள்ளார். ஒரு கொலையை மையப்படுத்திய த்ரில்லர் படம் இது. ஒரு போலீஸ் அதிகாரி, ஒரு க்ரைம் ரைட்டர் என இரண்டே கதாபாத்திரங்கள். ஏற்கனவே சில சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்ற இப்படம் மேட்ரிட் திரைப்பட விழாவில் திரையிட தேர்வு செய்யப்பட்டிருப்பதும், சிறந்த வெளிநாட்டு இயக்குனர் பிரிவில் போட்டிக்கு பரிந்துரைக்கப்பட்டிருப்பதும் கௌரவம்.

ஜுலை 4 -ஆம் தேதி கர்மா மேட்ரிட் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட உள்ளது. இந்த விழாவில் பங்கேற்கும் ஒரே தமிழ்ப் படம் இது.