பிரபல ஆன்மீக இயக்கத்திற்கு ரூ.4.75 கோடி அபராதம்

Share this :
No comments


அபராதத் தொகை ரூ. 4 கோடியே 75 லட்சத்தை உடனே செலுத்த வேண்டும் என்று வாழும் கலை அமைப்புக்கு பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.


ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் தலைமையிலான வாழும் கலைஅமைப்பு, டெல்லியில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு உலகக் கலாச்சார விழாவை நடத்தியது.

அப்போது, விழாவுக்காக, யமுனைநதிக் கரையில், ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாய நிலங்கள் அழிக்கப்பட்டு, பிரம்மாண்டமான மேடை அமைக்கப்பட்டது. யமுனை ஆற்றில் மிதவைப் பாலமும் அமைக்கப்பட்டது.

மேலும், யமுனை நதியில் ரசாயனப் பொடிகளைத் தூவி இயற்கைத் தாவரங்கள் அழிக்கப்பட்டது. இந்த விழா குறித்து, பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த பசுமைத் தீர்ப்பாயம், இந்த விழாவிற்கு முன்பு, வாழும் கலை அமைப்பு ரூ. 5 கோடி செலுத்தவேண்டும் என்று உத்தரவிட்டது.

ஆனால், 25 லட்சம் ரூபாயை மட்டும் செலுத்தி, மீதமுள்ள தொகையை விழாவுக்குப் பின்பு செலுத்துவதாக கூறியது. இதனால், விழாவுக்கு அனுமதி வழங்கப்பட்டது. விழா முடிந்த பின்பும், மீதித்தொகை செலுத்தவில்லை.

இந்த நிலையில், இந்த வழக்கு தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்த போது, அபராத தொகை ரூ.4.75 கோடியை உடனே கட்ட வேண்டும் என கண்டிப்புடன் உத்தரவிட்டது.

No comments :

Post a Comment