என்னைப் பற்றி அவதூறு - சூர்யா ஆவேச அறிக்கை

Share this :
No comments


மதம் சார்ந்த ஒரு நிகழ்வில் கலந்து கொள்ள நடிகர் சூர்யா பெரும் தொகை கேட்டதாக இணையத்தில் செய்தி பரவி வருகிறது. அதனை மறுத்து சூர்யா அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அவ்வறிக்கை -

மலேசியா தமிழ்ப் பத்திரிகையில் எனக்கே தெரியாத என்னைப் பற்றிய செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அதில் மதம் சார்ந்த நிகழ்வு நடைபெற இருப்பதாகவும், அதில் நான் கலந்து கொள்ள லட்சக்கணக்கில் பணம் கேட்டதாகவும் செய்தி வெளியாகியுள்ளது. சமூக வலை தளங்களில் இச்செய்தி பலரால் பகிரப்படுகிறது.

இப்படி ஒரு நிகழ்ச்சியைப் பற்றிய தகவல் கூட எனக்குத் தெரியாது. கலந்து கொள்ளும்படி யாரும் என்னை அணுகவும் இல்லை. கலைஞர்கள் சாதி, மதம், மொழி போன்ற எல்லா எல்லைகளையும் கடந்தவர்கள்.

கலைத்துறையில் இருக்கிற நான் மதம் தொடர்பாக நடக்கிற ஒரு நிகழ்வில் நிச்சயம் கலந்து கொள்ள சம்மதித்து இருக்க மாட்டேன்.

சமூக வளர்ச்சி, மாற்றம், விழிப்புணர்வு தொடர்பான நிகழ்வுகளில் ஆர்வமாக கலந்து கொள்கிற நான், அதற்காக எப்போதும் பணம் பெற்றதில்லை. பணம் வாங்கிக் கொண்டு நிகழ்வுகளில் கலந்து கொள்ள கூடாது என்கிற கொள்கை உடையவன் நான். அப்படி இருக்க ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நான் பணம் கேட்டதாக வந்த செய்தியில் துளியளவும் உண்மையில்லை.

இது போன்ற செய்திகள் வருவது வருத்தமளிக்கிறது. என் மீது அன்பு கொண்ட அனைவருக்கும் என் வேண்டுகோள். இனி இது போன்ற தவறான நோக்கத்தோடு இடம் பெறும் செய்திகளைப் புறக்கணித்து என்னுடைய நல்ல முயற்சிகளுக்கு ஆதரவளிக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

No comments :

Post a Comment