கருணாநிதி உள்ளே - ஜெயலலிதா வெளியே

Share this :
No comments


திமுக தலைவர் கருணாநிதியை சந்திப்பதை தவிர்க்க வேண்டும் என்பதற்காகவே, முதல்வர் ஜெயலலிதா, சட்டசபையில் இருந்து அவசரமாக வெளியேறினார்.

திருவாரூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திமுக தலைவர் கருணாநிதி, எம்எல்ஏவாக பதவியேற்க நேற்று காலை, 11:30 மணிக்கு சட்டசபைக்கு வந்தார்.

இந்த தகவல் சட்டசபையில் உள்ளே இருந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, முதல்வர் ஜெயலலிதா, சபாநாயகர் இருக்கை அருகே உள்ள வழியாக அவசரஅவசரமாக சபையில் இருந்து வெளியேறினார்.

கருணாநிதி பதவியேற்பதையும், அவரை சந்திப்பதையும் தவிர்க்கவே, முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் இருந்து அவரமாக வெளியேறியதாக கூறப்படுகிறது.

No comments :

Post a Comment