மொபைல்போனை விழுங்கிய வாலிபர்!... என்ன கொடுமை சார் இது?...
அமெரிக்காவின் டும்ளின் நகரில் செயல்பட்டு வரும் மனநலகாப்பகத்தில் இருந்த, 29 வயதான கைதி ஒருவர், சிறியரக மொபைல் போன் ஒன்றை விழுங்கியுள்ளார்.
விழுங்கி 6 மணிநேரம் கடந்த பின்னர், அந்நபர் அங்கிருந்த ஊழியர்களிடம் நான் மொபைல்போனை விழுங்கிவிட்டேன் என கூறியுள்ளார்.
மொபைல்போனை விழுங்கிய காரணத்தால், அந்நபருக்கு விடாப்பிடியாக வாந்தி வந்துகொண்டே இருந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைச்சென்றனர்.
எண்டோஸ்கோப் மூலம் ஒரு நீண்ட மெல்லிய நெகிழ்வான குழாயின் வழியாக ஒளி மற்றும் வீடியோ கமெராவினை பயன்படுத்தி பார்த்தபோது, உணவுக்குழாயின் வழியாக மொபைல்போன் வயிற்றுக்குள் இருப்பதை கண்டறிந்துள்ளனர்.
அதன் பின்னர் அவரது வயிற்றுப் பக்கவாட்டில் அறுவை சிகிச்சை மேற்கொண்டு மொபைல்போனை மருத்துவர்கள் வெளியே எடுத்துள்ளனர். -
Labels:
News
,
others
No comments :
Post a Comment