மீண்டும் அடித்தது அதிர்ஷ்டம் - ஓ.பன்னீர்செல்வத்திற்கு புதிய பதவி

Share this :
No comments


தமிழக நிதியைமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு புதிய பதவி வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அதிமுக 134 தொகுதிகளை வென்று ஆட்சியை பிடித்தது. முதல்வராக ஜெயலலிதா பதவியேற்றுக் கொண்டார். அடுத்து 28 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர். சட்டசபை தற்காலிக சபாநாயகராக செம்மலை நியமிக்கப்பட்டார்.

இந்த நிலையில், சட்டசபை முன்னவராக ஓ.பன்னீர்செல்வமும், அரசு தலைமைக் கொறடாவாக, அரியலூர் சட்டப் பேரவை உறுப்பினர் எஸ்.ராஜேந்திரனும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சட்டப்பேரவையில், முக்கிய தீர்மானங்கள் கொண்டு வருவது, முதல்வர் ஜெயலலிதா இல்லாத தருணங்களில் முக்கிய விவாதங்களில் அரசின் சார்பில் தெரிவிப்பது போன்ற முக்கியப் பணிகளை அவை முன்னவர் கவனிப்பார்.

No comments :

Post a Comment